ரேஷன் பொருட்களை 3 மாதங்கள் வாங்காமல் இருக்கும் பயனாளிகளின் குடும்ப அட்டைகளை ரத்து?

ரேஷன் பொருட்களை 3 மாதங்கள் தொடர்ச்சியாக வாங்காமல் இருக்கும் பயனாளிகளின் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

டெல்லி : ஜூன்-30  

மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு, மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியராம்விலாஸ் பஸ்வான், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேர்வதை உறுதிபடுத்த வேண்டும் என்றார். உரிய பயனாளிகளுக்குத்தான் அவை அளிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்குமாறு மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள்களை வாங்காத குடும்ப அட்டைதாரர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய ராம்விலாஸ் பஸ்வான், இதன் மூலம், மானிய விலையில் வழங்கப்படும் உணவுப்பொருள்களை வாங்க வேண்டிய  அவசியமில்லாதவர்களைக் கண்டறிந்து அவர்களது குடும்ப அட்டைகளை ரத்து செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.

Related Posts