ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில் அவரது மனைவி அபூர்வா கைது 

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்தவர் என்.டி.திவாரி. இவருடைய மகன் ரோகித் சேகர் திவாரி டெல்லியில் வசித்து வந்தார்.  இந்நிலையில் ரோகித் சேகர் திவாரி அவருடைய வீட்டில் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் கடந்த 16-ந் தேதி மயங்கி கிடந்தார்.உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடல் எய்ம்ஸ்மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை அறிக்கையில், ரோகித் சேகர் திவாரி கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. அவருடைய மரணம் இயற்கையானது அல்ல என்றும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் மருத்துவர்கள்தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரோகித் சேகர் திவாரி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இந் நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ரோகித் சேகர் திவாரியின் மனைவி அபூர்வாவை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அபூர்வாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கொலையில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்ததால், கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Related Posts