ரோஹிங்கயா அகதிகளை மியான்மருக்கு இந்தியா நாடு கடத்துகிறது என்ற ஐநாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது

ரோஹிங்கயா அகதிகளை கட்டாய நாடு கடத்தல் என்ற இந்தியாவின் முடிவை ஐநா மனித உரிமை ஆணையத்தின் அதிகாரிகள் வன்மையாக கண்டிப்பதாக அந்த அமைப்பை சேர்ந்த உயரதிகாரி நேற்று தெரிவித்தார். மேலும் இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐநாவின் இந்த கருத்துக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை இந்திய சட்டத்தின் அடிப்படையில் தான் அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பப்படுவதாகவும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு இந்திய நீதிமன்றங்கள் வழங்கிய வழிமுறைகளின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ரவீஷ் குமார் தெரிவித்தார்.

Related Posts