லண்டனில் முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

லண்டன் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 9.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன்  புறப்பட்டு சென்றார். அவருடன் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் செயலாளர்கள் விஜயகுமார், சாய்குமார், செந்தில்குமார், உள்ளிட்டோர் உடன் சென்றனர். நேற்று மாலை 6.40 மணிக்கு முதலமைச்சர் லண்டன் சென்றடைந்தார். விமான நிலையத்திலும், அவர் தங்கியுள்ள  ஓட்டலிலும்  முதலமைச்சர் பழனிசாமிக்கு பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும் அவர்கள்  வரவேற்றனர்.

லண்டனில் வருகிற 1ம் தேதி வரை தங்கி இருந்து, அங்குள்ள சில மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணித்திறன் மேம்பாடுகள் குறித்து முதலமைச்சர் நேரில் பார்வையிடுகிறார். பின்னர் லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையுடன் தமிழ்நாடு சுகாதாரத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. தமிழக அரசு விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள ஏர் ஆம்புலன்ஸ் விமானம் வாங்குவது குறித்தும் அங்குள்ள நிறுவனத்திடம் முதலமைச்சர் பேச்சுவர்த்தை நடத்துகிறார். இந்துஜா உள்ளிட்ட பெரிய  தொழில் நிறுவன அதிபர்களையும் சந்தித்து பேச முதலமைச்சர் திட்டமிட்டுள்ளனர்.

Related Posts