லண்டன் உயிரியல் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

லண்டன் உயிரியல் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

லண்டன் : மே-25

லண்டன் உயிரியல் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக, கடற்கரையில் குப்பைகளாக போடப்பட்ட 15 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டன. பூங்காவில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் வீடுகளை அமைத்து இவற்றில் தான் இனி வசிக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர். மனிதர்களால் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்றும், பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிடுவதன் அவசியம் குறித்தும் பூங்காவிற்கு வந்த சிறுவர், சிறுமியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Posts