லாலு பிரசாத் யாதவ் – தனியார் மருத்துவனையில் சிகிச்சை

 கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. 1990-ல் பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சியில் இருந்தபோது இந்த ஊழல்கள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான 4 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற வேண்டி, லாலு பிரசாத் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதன் பேரில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் 11-ஆம் தேதி லாலு பிரசாத்துக்கு 6 வாரங்கள் ஜாமீன் வழங்கியது. பின்னர் அது ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது லாலு பிரசாத்துக்கு 20-ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் ஜாமீன் காலம்  வரும் 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது மகன் தேகஸ்வி அவரது சுட்டுரை பக்கத்தில், தனது தந்தை நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய உடல் நிலை மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிப்பட்டு வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.

Second Cut :-

Related Posts