லிபியாவில் உள்ள இந்தியர்கள் உடனடியாக  வெளியேறவேண்டும்: சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தல்

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், லிபியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் அங்கு நாளுக்கு, நாள் நிலைமை மோசமாகி வருவதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்தியர்கள் பலரை அங்கிருந்து நாட்டிற்கு அழைத்து வந்த நிலையில் திரிபோலி நகரில் இன்னமும் 500 பேர் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரிபோலி நகரில் நிலவரம் மோசமாகி வருவதை சுட்டிக்காட்டிய உள்ள அவர், விமானங்கள் இயங்கும் இந்த சூழலை இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கூறியுள்ளார்..

இந்தியர்கள் அனைவரும் உடனடியாக லிபியாவில் இருந்து வெளியேற வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார்.

Related Posts