லிபியாவில் கார் குண்டு தாக்குதல் – 7 பேர் பலி

லிபியாவில் சந்தை பகுதியில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

லிபியா : மே-26

லிபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள பெங்காஸி நகரில் ரமலான் மாத கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். அதற்காக அங்கிருந்த மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கார் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

Related Posts