லோகேஷ், குல்தீப் அபாரம்: இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி

 

 

லோகேஷ் ராகுலின் அதிரடி, குல்தீப் யாதவின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மான்செஸ்டரில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி,  குல்தீப் யாதவின் சுழல் பந்துவீச்சால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 163 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ரோகித் சர்மா இறங்கினர். தவான் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ரோஹித் சர்மா 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய லோகேஷ் ராகுல் 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் சதம் அடித்து அசத்தினார். இதனால், 18.2 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் 101 ரன்களுடனும், விராட் கோலி 20 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

Related Posts