வங்ககடலில் வரும் 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் : சென்னை வானிலை மையம்

வங்ககடலில் வரும் 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதன் காரணமாக, தென்பகுதிகளில் பருவமழை மீண்டும் வலுப்பெற வாய்ப்பு உள்ளாதாக வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேநேரம், நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ள வானிலை மைய அதிகாரிகள், தென்மேற்கு பருவக்காற்றின் சாதக போக்கே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்பதும் வானிலை மைய அதிகாரிகளின் கணிப்பாகும்.

Related Posts