வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை 17ம் தேதி ஓங்கோல்-காக்கிநாடா இடையே கரையை கடக்கும்:சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை 17ம் தேதி ஓங்கோல்-காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மணடலமானது சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 690 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் இது சுமார் 260 கிலோ மீட்டர்தொலைவை கடந்துள்ளது எனவும், இது தற்போது 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். ‘பெதாய்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் நாளை மறுநாள் பிற்பகல் ஆந்திர மாநிலம் ஓங்கோல் மற்றும் காக்கி நாடா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார். இதன் காரணமாக15,16 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும்எனவும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தரைக்காற்றானது மணிக்கு45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் அவ்வப்போது வீசக்கூடும் எனவும்  எனவே, மீனவர்கள்  15,முதல் 17ந் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர்அறிவுத்தினார். சென்னையை பொறுத்தவரை இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை தரைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில், உள்ளூர் முன்னறிவிப்பு கொடி எண் 3ஏற்றப்பட்டுள்ளது.

Related Posts