வங்கக் கடலில் வரும் 29-ம் தேதி   புயல் சின்னம் உருவாக வாய்ப்பு  

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் , இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது 26- ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி அடுத்த  2 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும்  தெரிவித்தார்.  இதனை தொடர்ந்து , 29ம் தேதியில் இருந்து தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் எனவும்,  இந்த புயல் சின்னம் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  மேலும் இந்த புயல்  சென்னைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளதாகவும், சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.

Related Posts