விளையாட்டு

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் அசத்திய இந்திய ஹாட்ரிக் மன்னர்கள்

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் ஹாட்ரிக் சிக்சர்கள்,ஹாட்ரிக்  விக்கெட்கள்  என எடுத்து இந்திய வீரர்கள் ரசிகர்களை ஹாட்ரிக் சந்தோசத்திற்க்கு ஆளானார்கள். நாக்பூரில் நேற்று நடைபெற்ற இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான   3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியில் முதலில் பேட்டிங்க் செய்த இந்திய அணியின் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் ஹாட்ரிக் சிக்ஸரை அடித்து வெற்றிக்கு வித்திட்டார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 174 ரன்களை எடுத்தனர்.

அதன்பின் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 144 ரன் மட்டுமே எடுத்தது. இதில் இந்திய அணியின் தீபக் சாஹர் கட்டுக்கோப்பாக பந்து வீசி 3.2 ஓவரில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார். இதனால் டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Show More

Related News

Back to top button
Close