வங்காளதேசத்தில் பாலியல் புகாரை வாபஸ் பெற மறுத்த மாணவி  உயிரோடு எரித்துக்கொலை 

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெனி நகரை சேர்ந்த நஸ்ரத் ஜகான் ரபி. இவர்  அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த மாத இறுதியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவரது அறைக்கு தன்னை அழைத்து பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக நஸ்ரத் ஜகான் ரபி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தலைமை ஆசிரியரை கைது செய்தனர். இதையடுத்து அந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சிலரும், உள்ளூர் அரசியல்வாதிகளும் இணைந்து, தலைமை ஆசிரியரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்  நஸ்ரத் ஜகான் ரபி பொய் புகார் அளித்துள்ளதாக அவர்கள்  குற்றம் சாட்டினர். இந்நிலையில், தலைமை ஆசிரியர் மீது புகார் அளித்த 20 நாட்களுக்குப் பிறகு தேர்வு எழுதுவதற்காக நஸ்ரத் ஜகான் ரபி பள்ளிக்கு சென்றார். அப்போது, அவரின் தோழி ஒருவர், அவரை பள்ளிக்கூடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்றார். அங்கு பர்தா அணிந்திருந்த 5 பேர் நஸ்ரத் ஜகான் ரபியை சூழ்ந்துகொண்டு தலைமை ஆசிரியர் மீதான புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது.  அதனை ஏற்க மறுத்த மாணவி மீது மண்எண்ணெயை ஊற்றி தீவைக்கப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து, பரிதாபமாக உயிரிழந்தார்.  இச் சம்பவம் வங்காளதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related Posts