வங்காளப் பெண் கெட்டப்பில் சாய் பல்லவி

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக கவர்ந்த சாய் பல்லவி, தற்போது நடித்து வரும் புதிய படத்தில் வங்காளப் பெண் வேடத்தில் நடித்து வருகிறார்.

சென்னை : மே-11

பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்த படத்தில் மேக்கப் இல்லாமல் இயல்பாக நடித்ததால் தென்னிந்தியாவின் முன்னணி நடிகை ஆனார். அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் இவர் நடித்த ‘தியா’ படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு பக்கமே கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் சாய் பல்லவி இப்போது சர்வானந்த் ஜோடியாக பாடி பாடி லீஷ் மனசு என்ற ரொமாண்டிக் படத்தில் நடித்து வருகிறார். நிஜ வாழ்க்கையில் டாக்டரான சாய் பல்லவிக்கு படத்திலும் மருத்துவ மாணவி வேடம் வழங்கப்பட்டுள்ளது.

சாய்பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் லுக் வெளியானது. இந்த லுக்கில் வங்காள பெண் வேடத்தில் சாய்பல்லவி நடித்து இருக்கிறார். இந்த லுக்கில் மிகவும் வித்தியாசமாக இருப்பதால் சாய்பல்லவியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.

Related Posts