வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தில்

கடன்களுக்கான வட்டியை குறைக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடன்களுக்கான வட்டி விகிதம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தின் பலன்கள் முழு அளவில் வாடிக்கையாளர்களுக்கு போய் சேருவதில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைப்பதில் எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என ரிசர்வ் வங்கி அதிருப்தி வெளியிட்டுள்ளது. எனவே வங்கிகள், வீட்டுக் கடன், தனிநபர் கடன், மற்றும், சிறு,குறு தொழில்களுக்கான கடன் பெற்றவர்களுக்கு உடனடியாக வட்டியை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Related Posts