வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் பூஜ்யம் புள்ளி இரண்டு, 5சதவீதம் குறைப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.


இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். அவ்வாறு கடந்த நிதி ஆண்டில் ரெப்போ வட்டி விகிதம் பூஜ்யம் புள்ளி இரண்டு, 5 சதவீதம் என 2முறை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு இன்று மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று மதியம் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது.இந்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே ரெப்போ வட்டி விகிதம்பூஜ்யம் புள்ளி இரண்டு, 5 சதவீதம்  குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 2019 -20ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 புள்ளி 4 சதவீதத்தில் இருந்து 7புள்ளி 2 சதவீதமாக இருக்கும் என கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் ரிவர்ஸ் ரெப்போ 5புள்ளி ஏழு 5 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இதையடுத்து வீட்டுக் கடன் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி விகிதம்குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts