வங்கிகள் இணைப்பை கண்டித்து டெல்லியில் மாநாடு நடத்தி போராட்டம் நடத்த திட்டம்

வங்கிகள் இணைப்பை  கண்டித்து வரும் 11ம் தேதி  டெல்லியில்  மாநாடு நடத்தி போராட்டம் நடத்த திட்டம்- அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 10 பொதுத் துறை வங்கிகளை ஒன்றிணைத்து நான்காக மாற்றி அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பாரிமுனையில் உள்ள யூனியன் வங்கியில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் சம்மேளனம் சார்பில் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அகில இந்திய வங்கிகள் சம்மேளன பொது செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் வெங்கடாசலம், பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து வரும் 11ம் தேதி டெல்லியில்  மாநாடு நடத்தி போராட்டம் நடத்த திட்ட மிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Posts