வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

      வடகிழக்கு பருவமழையையொட்டி, மீட்பு பணிகள் தொடர்பாக தேசிய கடல் ஆராய்ச்சி மையத்துடன், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், அமைச்சர் ஆர்.பி உதயகுமார் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயகுமார், பேரிடர் மேலாண்மைத் துறையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மழையின் அளவு மற்றும் தீவிரம் குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில் தேசிய கடல் ஆராய்ச்சி மையத்துடன் வருவாய் துறையினர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இதன் மூலம் 5 நாட்களுக்கு முன்பாக மழையின் தீவிரத்தை அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இயலும் எனவும் அவர் கூறினார்.  சென்னையில் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகதமிழ்நாடு ஸ்மார்ட் அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் புகார்களை தெரிவிக்க இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மக்களின் புகார் தொடர்பான மனுக்களை பரிசீலிக்க 5 ஆயிரம்அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 32 மாவட்டங்களிலும் நேரடியாகவும், காணொலிக்காட்சி மூலமாகவும் ஆய்வு பணிகள் தொடரும் எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Related Posts