வடகொரியாவின் அணு ஆயுத தளம் மூடப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்

வடகொரியாவின் அணு ஆயுத தளம் மூடப்படுவதை நேரில் வந்து உறுதி செய்து கொள்ளுமாறு ஐ.நா. சபைக்கு தென்கொரியா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

வடகொரியா : மே – 02

ஐ.நா. சபை தீர்மானங்களை மீறி, உலக நாடுகளின் எதிர்ப்புக்கு இடையே கடந்த 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வந்த வடகொரியா, தற்போது அவற்றை விட்டு விடுவதாக அறிவித்துள்ளது. கடந்த 21-ஆம் தேதி முதல் அந்த நாடு அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வந்து விடுவதாக அறிவித்துள்ளது. இந்த மாதத்தில் வடகொரியாவின் புங்கியே-ரி அணு ஆயுத பரிசோதனை தளம் மூடப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முக்கிய பங்காற்றி வரும் தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இன், ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, வடகொரியாவின் அணு ஆயுத தளம் மூடப்படுவதை ஐ.நா. சபையின் சார்பில் நேரில் வந்து உறுதி செய்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts