வடகொரியாவில் அணு ஆயுத சோதனைகளோ,  ஏவுகணை சோதனைகளோ நடைபெறாது

வடகொரியாவில் இனி அணு ஆயுத சோதனைகளோ,  ஏவுகணை சோதனைகளோ நடைபெறாது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.

வடகொரியா : ஏப்ரல்-21

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறியும், ஐ.நா சபையின் தடையை எதிர்த்தும், வடகொரியாவில் அடுத்தடுத்து ஏவுகணை சோதனை, அணுகுண்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே, சில மாதங்களாக வடகொரியாவில் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், வடகொரியாவில் இனி அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு உடனடியாக சோதனைகளை நிறுத்துவதாக கிம் ஜாங் உன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் வடகொரியாவில் செயல்பட்டு வரும் அணு ஆயுத சோதனை மையங்களை மூடவும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தவிட்டுள்ளார். ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில், அதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Related Posts