வடக்கு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், வடக்கு உள் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : மே-05

கர்நாடகாவில் இருந்து கன்னியாகுமரி வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், வடக்கு உள்மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை இடியுடன் கூடிய சூறாவளிக்காற்று பல ஊர்களில் வீசக் கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வடக்கு உள் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது.

Related Posts