வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு தீவிர மழை இருக்கும்

வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு தீவிர மழை இருக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி : ஜூன்-27

குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், மணிப்பூர் உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநில அரசுகளுக்கும் இந்த வாரம் முழுவதும் மழை பெய்யும் என்று வானிலை மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கனமழை பொழிவால் தமன்கங்கா, பிரம்மபுத்திரா, கிருஷ்ணா மற்றும் பாரக் நதிகள் பெருக்கெடுத்து ஓடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Posts