வடமாநிலங்களில் புயல் மழைக்கு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்:  பிரதமர் மோடி

ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நேற்று புயல் தாக்கியது. அதனைத் தொடர்ந்து பெய்த  பலத்த மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை சேதமடைந்தன. இந்த புயல் மழையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதேபோல் மத்தியபிரதேசம், குஜராத் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் புயல் மழைக்கு 19  பேர் உயிரிழந்தனர்.  புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டோருக்கு துணை நிற்போம் எனவும், மத்திய அரசு அனைத்து உதவிகளையும், ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்துவருவதுடன் கண்காணித்தும் வருவதாகவும் கூறியுள்ளார்.  புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம்  ரூபாய் வழங்கப்படும் எனவும்,  மேலும் இந்த புயல் மழையால் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Posts