வடமாநிலங்களை உலுக்கிய புழுதிப்புயல் – பலி எண்ணிக்கை உயர்வு

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை உலுக்கிய புழுதிப்புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தான் : மே-04

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை நேற்று முன்தினம் இரவு புழுதி புயல் திடீரென தாக்கியது. மழையோடு சேர்ந்து மணிக்கு 126 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புழுதிப்புயலால், மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. கூரை வீடுகளும் கடுமையாக சேதமடைந்தன. இந்த பாதிப்பில், உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 73 பேரும், ஆக்ரா மாவட்டத்தில் மட்டும் 46 பேர் பலியானதாகவும் மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ராஜஸ்தானில், 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரு மாநிலத்திலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பாரத்பூர் பகுதிகளை முதலமைச்சர் வசுந்தரா ராஜே இன்று பார்வையிட்டார்.

Related Posts