வட கொரியாவில் அணு ஆயுதங்கள் முழுமையாக ஒழிக்கப்படும்

Want create site? Find Free WordPress Themes and plugins.

வட கொரியாவில் அணு ஆயுதங்கள் முழுமையாக ஒழிக்கப்படும் என்று அந்நாட்டின்  அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் : ஜூன்-12

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரின் செண்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இன்று காலை சந்தித்தனர். உலகமே உற்றுநோக்கிய இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பில், டிரம்பும் கிம் ஜாங் உன்னும் ஒருவரையொருவர் கைக்குலுக்கி வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, அமெரிக்கா-வடகொரியா இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில், டிரம்பும், கிம்-ஜாங்-உன்னும் இருதரப்பு பிரதிநிதிகள் குழுக்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, செய்தியாளர்கள் முன்னிலையில், முக்கிய ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவும், வடகொரியாவும் புதிய சூழலில் உறவுகளைப் பேண உள்ளதாக தெரிவித்தார். எதிர்காலத்திலும் வடகொரிய அதிபருடனான சந்திப்பு தொடரும் எனத் தெரிவித்த டிரம்ப், கிம்-ஜோங்-உன்னை வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் எனவும் கூறினார். மேலும், அணு ஆயுத ஒழிப்பு விவகாரத்தில், வடகொரியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், இந்த சந்திப்பை உலகமே உற்றுநோக்குவதாகவும், டிரம்புடனான தமது சந்திப்பு திரைப்படத்தில் வரும் கற்பனைக்காட்சி போல பலரும் நினைத்திருக்கக் கூடும் என்றும் கூறினார். கடந்த காலங்களில் நடந்தவற்றை மறக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்த கிம் ஜாங் உன், வட கொரியாவில் அணு ஆயுதங்கள் முழுமையாக ஒழிக்கப்படும் என்று கூறினார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts