வட கொரியா அதிபர் – அமெரிக்கா அதிபர் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்

வட கொரியா அதிபர் கிம்-ஜாங் உன்னை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்க உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்கா : மே-30

சிங்கப்பூரில் வரும் 12 ஆம் தேதி அணு ஆயுதக் குறைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம்-ஜாங் உன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடகொரியா – அமெரிக்கா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். இந்த சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரான சாரா சாண்டர்ஸ்  உறுதிபடுத்தா விட்டாலும், சந்திப்பு உறுதி என்று மட்டும் தெரிவித்தார். இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு குறித்து அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு நடைபெற்று வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Related Posts