வட கொரியா அதிபர் கிம் ஜான் ரஷியா பயணம்: புதினுடன் பேச்சுவார்த்தை

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சந்தித்து பேசிய பிறகு, வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன. இந்நிலையில், டிரம்ப்-கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ? என்கிற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து பேசி தீர்வுகாண 3-வது சந்திப்புக்கு இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, , வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னும் ஏப்ரல் 25-ம் தேதி ரஷியாவின் விலாடிவோஸ்ட்டோக் நகரில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில்,வடகொரிய அதிபர் கிம் ஜாங் தனது சிறப்பு ரெயில் மூலம் சுமார் 9 மணிநேரம் பயணித்து ரஷியா நேரப்படி  முற்பகல் 11 மணியளவில் விலாடிவோஸ்ட்டோக் நகரை சென்றடைந்தார். ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்-னும் நாளை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக  பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

Related Posts