வட கொரியா அதிபர் நடவடிக்கைகளில் மாற்றங்கள் – அதிபர் டிரம்ப்

சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடனான சந்திப்புக்கு பிறகு வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தென்படுகின்றன என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா : மே-23

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறினார். இதையடுத்து, இரு தலைவர்களும் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடனான சந்திப்புக்கு பிறகு வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்படுகின்றன என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கவில்லை என்றும் அவர்  குற்றம்சாட்டியுள்ளார்.

Related Posts