வட தமிழகத்தின் சில பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய  வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக வட தமிழகத்தின் சில பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய  வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : மே-24

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்தே, பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இருப்பினும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் கடுமையாக கொளுத்துகிறது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. வட தமிழகத்தின் சில பகுதிகளில், இடி மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய  வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Posts