வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்

வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : மே-31

தமிழகத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தாலும், சென்னை, வேலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பத்தின் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. அக்னி நட்சத்திரம் முடிவடைந்தாலும், வெயிலின் தாக்கம் குறையாததால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், வடதமிழகத்தில் அடுத்து வரும் 3 நாட்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. மேற்கில் இருந்து வீசும் காற்றின் காரணமாக வட மாவட்டங்கள், கடலோர பகுதிகளில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts