வட தமிழகம் மற்றும், ஆந்திர கடலோர பகுதிகளில் நாளை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்

புயல் சின்னத்தால் வட தமிழகம் மற்றும், ஆந்திர கடலோர பகுதிகளில் நாளை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், சென்னையில் இருந்து 960 கிலோ மீட்டர் தொலைவில் வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என தெரிவித்தார்.

இந்த புதிய புயல் வருகிற 17-ம் தேதி ஆந்திராவின் ஓங்கோல் – காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என்றும், இதனால், வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் நாளை முதல் கனமழை பெய்யும் என பாலச்சந்திரன் கூறினார்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதி கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால், அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, புயல் சின்னம் எதிரொலியால், நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Related Posts