வட மாநிலங்களில் வீசிய புழுதி புயலுக்கு 60 பேர் பலி

வட மாநிலங்களில் கனமழையுடன் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புழுதி புயலுக்கு 60 பேர் பலியாகி உள்ளனர்.

டெல்லி : மே-14

தலைநகர் டெல்லிஉத்தரப்பிரதேசம்,  மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல், பயங்கர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 20 பேர் பலியான நிலையில், 28 பேர் படுகாயமடைந்தனர். இதே போன்று ஆந்திராமேற்குவங்கம்  ஆகிய பகுதிகளிலும் புழுதி புயலுக்கு ஏராளமானோர் பலியாகி உள்ளனர். மரங்கள் முறிந்து விழுந்ததால் ஏராளமான கார்கள் சேதமடைந்துள்ளன. மேற்கு வங்கத்தில் இடிமின்னலுடன் பெய்த கனமழைக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் மட்டும் பேர் மின்னல் தாக்கி பலியாகி உள்ளனர். கனமழை மற்றும் புழுதி புயலால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Posts