வணிகர் சங்க மாநாட்டில் மு.க. ஸ்டாலின், மருத்துவர் ராமதாஸ் கூட்டாக பங்கேற்பு

சென்னை வேலப்பன்சாவடியில் நடைபெற்ற வணிகர் சங்க மாநாட்டில், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை : மே-05

தமிழ்நாடு வணிகர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே 5-ஆம் தேதி வணிகர் தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், 35-வது வணிகர் தினம், இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடாக சென்னை வேலப்பன்சாவடியில் இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் தொடங்கிய இந்த மாநாட்டில், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதேபோல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், வணிகம், விவசாயம் மற்றும் சுயதொழில்கள் மீட்பு மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், அரசியல் கட்சித் தலைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். வணிகர் தினத்தையொட்டி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Related Posts