வந்தே  பாரத் ரெயில் சேவை தொடங்கியது

டெல்லி – வாரணாசி இடையே வந்தே  பாரத் விரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

வந்தே பாரத் ரெயில் சென்னை ஐ.சி.எப். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 18 மாதத்தில் தயாரிக்கப்பட்டது. என்ஜின் இல்லாமல் நவீன வசதிகளுடன் வந்தேபாரத் விரைவு ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டெல்லி-வாரணாசி இடையேயான சுமார் 800 கிலோ மீட்டர். தொலைவை 8 மணி நேரத்தில்  இந்த ரெயில் கடக்கும்.  ஜிபிஎஸ் பயணிகள் தகவல் தொடர்பு முறை,  கண்காணிப்பு கேமரா,  அவசரதேவைக்கு ரெயில் ஓட்டுனருடன் பேசும் வசதி ஆகிய அம்சங்கள் இந்த ரயிலில் இடம் பெற்றுள்ளது.  மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ சென்சார் வசதியுடன் கூடிய கழிவறைகள் போன்ற நவீன வசதிகள் உள்ளன. டெல்லி-வாரணாசி இடையே வந்தேபாரத் விரைவு ரெயில் சேவையை இன்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பின்னர் ரெயிலின் உள்ளே சென்று  பார்வையிட்டார். விழா தொடங்குவதற்கு முன் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது

Related Posts