வரதட்சணை புகாரில் உடனடியாக கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீக்கம்

வரதட்சணை புகாரில் உடனடியாக கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

      வரதட்சணை தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த  உச்சநீதிமன்ற  இரு நீதிபதிகள் அமர்வு, வரதட்சணை கொடுமை தொடர்பாக யாரையும் உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும், வரதட்சனைக் கொடுமை செய்வதாக பெண்கள் அளிக்கும் பொய்ப் புகார்களால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும், எனவே கைது செய்வதற்கு முன் வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.

     இந்நிலையில், வரதட்சணை தொடர்பான வழக்கு ஒன்றை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம்,  வரதட்சணை புகாரில் உடனடியாக கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது. மேலும், புகார் தொடர்பாக உடனடியாக கைது செய்யலாம் எனவும்,புகார் அளிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கூறிய நீதிமன்றம், முன்ஜாமின் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் முடிவு செய்யலாம் என கூறியுள்ளது.

Related Posts