வரதட்சணை விவகாரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை என்று நாடகமாடியவர் கைது

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சுந்தரபாண்டிய புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் தென்காசியைச் சேர்ந்த விக்னேஷ்வரி என்பவரை  கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்

இந்நிலையில் சில தின்ங்களுக்கு முன்பு விக்னேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் எழுதியதாக கூறப்படும் கடித்த்தில், தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்த்து.

விக்னேஷ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது வரதட்சணை விவகாரத்தில் விக்னேஷ்வரியை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு மாரியப்பன் நாடகமாடியது தெரியவந்த்து. இதையடுத்து மாரியப்பனை காவல்துறையினர் கைது செய்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Posts