வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் அயர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

அயர்லாந்தில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.

அயர்லாந்து : மே-16

வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் கடந்த 11-ம் தேதி டப்ளினில் தொடங்கியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. தங்களது நேர்த்தியான பந்து வீச்சால் பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னி்ங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கி அயர்லாந்து, 47.2 ஓவர்களில் 130 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 2-வது இன்னிங்சில் அயர்லாந்து வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த அணி 2-வது இன்னிங்சில் 339 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.

Related Posts