வரி ஏய்ப்பு செய்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்

சினிமா டிக்கெட்டுகள் விற்பனையில் தனியார் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை சார்பில் சென்னை பாரிமுனையில் உள்ள குறளக வளாகத்தில் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் கதர் பொருள்கள் விற்பனையை அமைச்சர்கள் ஜெயக்குமார், பாஸ்கரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சினிமா டிக்கெட்டுகள் விற்பனை குறித்து கருத்து தெரிவித்தார்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்று அவர் கூறினார். உற்பத்தியும், நுகர்வோரும் சரி சமமாக இருப்பதால் தமிழகம் பாதிப்புக்குள்ளாகாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை வெளியிட்டார்.

Related Posts