வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

கடந்த 2018 – 19க்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஏப்ரலில் துவங்கியது. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.

வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருமான வரி உச்சரவரம்புக்குக் குறைவாக இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்வது கடந்த ஆண்டு முதல் கட்டாயம் ஆகியுள்ளது.

இதற்கான அவகாசம் ஜூலை 31ல் முடிவடைவதாக இருந்தது.

இதற்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் அபராதம் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்திருந்த்து. ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர் 1000 ரூபாய், அபராதமும், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவோர் டிச. வரை 5000 ரூபாயும், ஜனவரி முதல் மார்ச் வரை 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை, வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts