வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு..

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2017-18 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய கடந்த மாதம் 30ம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. பின்னர், இந்த அவகாசம் அக்டோபர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் 15 நாள் நீடித்து அக்டோபர் 31 வரை அவகாசம் வழங்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த காலக் கெடுவுக்குள் கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யாதவர்கள் அபராதம் செலுத்த வேண்டிவரும் என வரிகள் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Posts