வரும் அக்டோபர் மாதம் புதிய விண்கலம் ஒன்றை அனுப்ப இஸ்ரோ திட்டம்

உலக நாடுகள் செல்லாத நிலவின் தென் பகுதிக்கு வரும் அக்டோபர் மாதம், புதிய விண்கலம் ஒன்றை இஸ்ரோ அனுப்பவுள்ளது.

ஆந்திரா : ஜூன்-29

சந்திரயான்-2 திட்டத்தின் கீழ், நிலவின் மறுபகுதியான தெற்குப் பகுதிக்குச் செல்ல இஸ்ரோ தயாராகி வருகிறது. நிலவின் முன் பகுதியில் மட்டுமே இதுவரை உலக நாடுகள் ஆராய்ச்சி  நடத்தியுள்ளன. ஆனால், அதன் மறு பகுதியான, தென் பகுதிக்கு இதுவரை எந்த நாட்டு செயற்கைக்கோளும் பயணித்தது இல்லை. அங்கு, 68 கோடியே 81 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடைய, அதாவது விலை உயர்ந்த அணு எரிபொருளான ஹீலியம்-3 நிறைந்து காணப்படுவதாக நம்பப்படுகிறது.  இதுகுறித்த ஆய்வு செய்ய முடிவெடுத்த இஸ்ரோ, வரும் அக்டோபர் மாதம் புதிய விண்கலத்தை அனுப்புகிறது. இஸ்ரோ நம்புவதுபோல், அங்கு அணு எரிபொருளான ஹீலியம்-3 இருப்பது தெரியவந்தால், அடுத்த 250 ஆண்டுகளுக்கான உலக நாடுகளின் மின் ஆற்றல் தேவை பூர்த்தியாகும் என நம்பப்படுகிறது.

Related Posts