வரும் தேர்தலில் பா.ஜ ஆட்சி முடிவுக்கு வரும்: மம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் தலைவருமான மம்தா பானர்ஜி, உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் சோப்ரா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், வரும் தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சி முடிவுக்கு வரும் எனவும் மோடி மீண்டும் பிரதமராக முடியாது எனவும் தெரிவித்தார்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக, வெளிநாடுகளுக்கு ஊர் சுற்றிய மோடி, இப்போது தேர்தல் நேரத்தில் மட்டும் நாட்டு பணி செய்வதாக அவர் கூறினார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர முயற்சி செய்வதாக குறிப்பிட்ட அவர், மோடியை வெளியேற்றவே ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணிகள் ஏற்பட்டுள்ளதாக கூறினார். தேர்தலில் மோடி வெளியேற்றப்பட்டதும் தாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து புதிய இந்தியாவை கட்டமைக்க பணியாற்றுவோம் என்று ம்ம்தா கூறினார்.

Related Posts