வரும் 22 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்

காவிரி பிரச்சனை தொடர்பாக விவாதிக்க சென்னையில், வரும் 22 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : மே-20

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் அனைத்து கட்சி கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், பருவ காலத்துக்கு முன்பாக திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில், அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், வரும் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts