வரும் 28 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்

வரும் 28 ஆம் தேதி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தணிக்கைக்குழு அறிக்கை, தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக வரும் 28 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 9 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts