வரும் 29 ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டசபை கூட்டம் வரும் 29-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : மே-15

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி தொடங்கி போது, 2018-19-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை அவர் வாசித்து முடித்ததும், சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஏப்ரல் 19-ம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து, அவை நடவடிக்கைகளை சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில், துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வரும் 29-ம் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வரும் 29-ம் தேதி காலை 10.30 மணிக்கு சட்டசபை கூடுவதாக அறிவித்துள்ளார். அப்போது, துறை வாரியாக நிதி ஒதுக்குவதற்கு மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts