வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால் சீனா விளைவுகளை சந்திக்க நேரிடும்:  டொனால்ட் டிரம்ப் 


வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக இருநாடுகளுக்கு இடையே இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின்னர் ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் என்று சீனா எண்ணுவதாகக் கூறியுள்ளார். 2020-ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் சீனாவுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஜனநாயகக் கட்சி வெற்றி பெறும் என்றும் ஆனால் வெல்லப் போவது தங்கள் கட்சிதான் என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக தாம் பதவிக்கு வந்தால் சீனாவின் நிலைமை மேலும் மோசமாகி விடும் என்று அவர்  எச்சரித்துள்ளார். இதன்மூலம் இருநாடுகளிடையே மீண்டும் வார்த்தைப்போர் தொடங்கியுள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பாடாவிடில் வர்த்தகப்போர் தீவிரமடையும் மேலும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

Related Posts