வர்த்தக நேர துவக்கத்தில் சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயர்வு

முக்கிய துறைகளின் பங்குமதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டி உள்ளன.

                இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் சென்செக்ஸ் 114 புள்ளி 88  புள்ளிகள் உயர்ந்து  38 ஆயிரத்து  400  புள்ளி  63  புள்ளிகளாகவும்,  நிப்டி 30 புள்ளி 1 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து601 புள்ளிகளாகவும் உள்ளன. ஐடி துறை பங்குகளின் மதிப்பு அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், வங்கித்துறை பங்குகளின் மதிப்பு சரிவுடன் காணப்படுகின்றன. எச்டிஎப்சி, ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், வேதாந்தா உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன

Related Posts