வறுமை கோட்டு கீழுள்ளவர்களுக்கு நிதிஉதவி, அதிமுகவின் அறிக்கைக்கு தடை கோரிய வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்கிற அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற உத்தரவின் படி அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும், அதிமுக தேர்தல் வாக்குறுதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கே உகந்த்து இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Related Posts