வலிமையான இந்தியாவை உருவாக்க, நாடு முழுவதும் தாமரையை மலர செய்ய வேண்டும் பிரதமர் மோடி


ஒடிசா மாநில சுந்தர்கர் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக கட்சியாக பாஜக விளங்குவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். நாட்டின் நான்கு பக்கங்களிலும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காகவும் பாஜக பாடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் இயங்கி வந்த தீவிரவாத முகாம்கள் மீது பாஜக அரசு தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், நம் நாட்டு ராணுவ வீரர்களுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கப்படும் என தெரிவித்த காங்கிரஸ் கட்சி தன் தேர்தல் அறிக்கையில் ஏன் அதனை குறிப்பிடவில்லை என கேள்வி எழுப்பினார்.

Related Posts